shadow

இந்தியாவில் மின்சார கார். அமெரிக்க நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் மின்சார கார்களை விற்பனை செய்யும் டெஸ்லா நிறுவனம் முதன்முதலாக இந்தியாவில் மின்சார கார்களை அறிமுகம் செய்கிறது. இந்த தகவலை டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதன்முதலில்  ‘மாடல் 3’ என்ற மாடல் மின்சார காரை டெஸ்லா அறிமுகம் செய்ய உள்ளது. இந்த காரில் உள்ள மின்சார பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 346 கி.மீ வரை செல்லும். எரிபொருள் தட்டுப்பாடு உள்ள இந்த காலத்தில் இந்த கார் அறிமுகமாவது இந்தியர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் டெஸ்லாவின் தொழிற்சாலைக்கு சென்ற போது டெஸ்லா சி.இ.ஒ எலான் மஸ்க்கையும் சந்தித்து இந்தியாவில் மின்சார கார்களை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply