அமெரிக்காவின் ஷாப்பிங் மாலில் தீவிரவாதிகள் தாக்குதல். 4 பேர் பலி

shadow
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள பர்லிங்டன் பகுதியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் மர்ம நபர்கள் திடீரென புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவின் பரபரப்பான பர்லிங்டன் பகுதியில் உள்ள காஸ்கட் என்ற மாலினுள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் இந்த துப்பாக்கிச் சூடு ஈடுபட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து காஸ்கட் மால் உடனடியாக மூடப்பட்டது.. அங்கிருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வாஷிங்டன் போலீசாருக்கும், மர்ம நபர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் சற்று நேரம் முன்பு வரை மர்ம நபர்கள் உயிருடன் தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *