மதுரை மாவட்டம் பைப் வெடிகுண்டு மற்றும் ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பாக தீவிரவாதிகள் தேடப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன் தந்த தகவலின் அடிப்படையில் ஆந்திராவில் உள்ள புத்தூர் விரைந்தனர். அங்கு தீவிரவாதியுடன் துப்பாக்கிச் சூடு சண்டை நடந்தது. இதில் இரு போலீஸார் காயமடைந்துள்ளனர்.
தமிழக காவலர் லட்சுமணன் மற்றும் கியூ பிரிவு காவலர் நரசிம்மன் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதி பதுங்கியுள்ள அப்பகுதியில் பாதுகாப்பு காரணமாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதல் ஆந்திர மாநிலத்தில் உள்ள புத்தூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது எதிர்த் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் காயம் அடைந்தநர்.
அதில், பயங்கரவாதி சித்திக் அலி போலீஸாரின் பிடியில் இருந்து தப்பி ஓடினான். தப்பியோடும் வழியில், அகப்பட்ட சிறுமியை அரிவாளால் வெட்டினான்.
அதில், சிறுமிக்கு அரிவாள் வெட்டு விழுந்து பலத்த காயம் அடைந்தாள். அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.காவல்துறையினரின் தீவிர முயற்சிக்குப் பிறகு சரண் அடைந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதன் மூலம் காலையில் இருந்து நீடித்து வந்த துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்தது.

காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, குறிப்பிட்ட வீட்டில் இருந்த 3 குழந்தைகள், பெண் ஆகியோரை மீட்டனர். அதன் பின்னர், இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் வெளியே கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், பல நாட்களாக தேடப்பட்டு வந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *