shadow

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திடீரென மூடப்பட்ட 1000 பள்ளிகள். பெரும் பரபரப்பு
school
சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் தீவிரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதை அடுத்து அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்போவதாக நேற்று ஒரு வதந்தி எழுந்தது. இதன் காரணமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சுமார் 1000 பள்ளிகள் மூடப்பட்டன

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பள்ளிகளில் தீவிரவாதிகள் பெரிய அளவில் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்த போவதாகவும், துப்பாக்கி சூடு நடத்த போவதாகவும் நேற்று காலை திடீரென வதந்தி வெளியானது. இதனையடுத்து,  நகரின் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்களும் காவல்துறை அதிகாரிகளும் சோதனையை தீவிரப்படுத்தினர்.

நேற்று ஒரே நாளில் சுமார் 1500 பள்ளிகளில் இரவு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் இன்று 1000 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அறிவிப்பால் சுமார் ஆறரை லட்சம் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த போவதாக வந்த தகவல் வதந்தி என்றும், இருப்பினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply