shadow

12

வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று தள்ளுபடை செய்யப்பட்டது.

பழந்தமிழர் மக்கள் கட்சி நிர்வாகி வீரகுமார் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்ஹ்டின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு ஒன்றை விசாரணை செய்த  நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் படம் திட்டமிட்டபடி வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனதெரிகிறது.

வீரகுமார் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விவரம்: நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தின் டிரெய்லர் காண்பிக்கப்படுகிறது. இதில், விஜயநகரப்பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். கிருஷ்ணதேவராயர் சிறந்த போர்வீரர். சிறப்பான ஆட்சி நடத்தியவர். தென்னிந்தியாவில் இசுலாமிய படையெடுப்பை தடுத்தவர் .அவரது வேடத்தை ஏற்றுள்ள வடிவேலு கோமாளி போன்று காட்சி தருகிறார்.

கிருஷ்ணதேவராயருக்கு 36 மனைவியர் 52 குழந்தைகள் இருப்பதாகவும் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வரலாற்று தகவல் கிடையாது. ஒரு பேரரசரின் வரலாற்றை திரித்துக்கூறி பணம் சம்பாதிக்க வடிவேலு மற்றும் படக்குழுவினர் முயற்சிக்கின்றனர். எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

வரலாற்றை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதியிருப்பதாகவும், வரலாற்றின் அடிப்படையாக வைத்து படத்துக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் தெனாலிராமனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply