மத்திய தரைக்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய சுமைதாங்கி கல்

stoneபத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் உலகின் மிகப்பழமை வாய்ந்த சுமைதாங்கி ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழக கிராமங்களில் சுமைதாங்கி கல் வைக்கும் வழக்கம் இருந்ததை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். நிறைவேறாத ஆசை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இறந்தால், அவர்கள் நினைவாக சுமைதாங்கி கல் வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இத்தாலியின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மற்றும் இத்தாலி கடலாராய்ச்சி மையத்தின் ஆய்வாளரும் இணைந்து நடத்திய அகழ்வாராய் ஒன்றில் 12 மீட்டர் உயரம் கொண்ட சுமைதாங்கி கல்லின் பாகங்கள் சிசிலி கடலுக்கடியில் 40 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தரையில் அமைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்றும் தரைப்பகுதியாக இருந்த  இப்பகுதி பின்னர் கடலால் சூழப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இதுவரை கண்டெடுக்கப்பட்டதிலேயே மிகப்பழமையான சுமைதாங்கி கல் இதுதான் என கூறப்படுகிறது. இந்த சுமைதாங்கி கல் மனிதனின் அறிவாற்றலையும், சமூகமாக அவன் வாழ்ந்து வந்ததையும் உணர்த்துகிறது. இந்த கண்டுபிடிப்பு மனிதன் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழத் தொடங்கிய காலகட்டத்தை அடையாளம் காண உதவும் என்று ஆராய்ச்சியாளர்களால் நம்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *