ஜூன் 1 முதல் வழிபாட்டுதலங்கள் திறப்பு:

முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட நாட்டின் எந்த வழிபாட்டு தலங்களும் திறக்கப்படாமல் இருந்தன. கடந்த 60 நாட்களுக்கு மேல் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருப்பதால் அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்ய முடியாமல் உள்ளனர்

இந்த நிலையில் ஜூன் 1-ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்கள் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மே 31-ஆம் தேதி பின்னர் ஊரடங்கு முடிவுக்கு வந்ததும், ஜூன் 1 முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்

ஏற்கனவே ஜூன் 1 முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படும் என அமைச்சர் கோட்டா சீனிவாசன் கூறியுள்ள நிலையில் அதனை தற்போது முதல்வர் எடியூரப்பா அவர்கள் உறுதி செய்துள்ளார்

இதனை அடுத்து ஜூன் 1 முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தளங்களும் திறப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கர்நாடக மாநிலம் போலவே தமிழகம் உட்பட வேறு சில மாநிலங்களிலும் ஜுன் 1 முதல் வழிபாட்டுத்தலங்கள் நிபந்தனைகளுடன் திறக்க அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது

Leave a Reply