shadow

சிலைகளை பாதுகாக்க 2021 வரை அவகாசமா? நீதிமன்றம் காட்டம்

தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக கோயில்களில் பாதுகாப்பு அறை அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த வழக்கின் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் அடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், கோயில்களில் 3,000 பாதுகாப்பு அறைகள் அமைக்க வேண்டியுள்ளதால் வரும் 2021க்குள் பாதுகாப்பு அறை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த பதில் மனு நீதிபதிகளை காட்டமடைய செய்தது. இதுகுறித்து ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் கூறுகையில், ‘கோயில்களில் சிலை பாதுகாப்பு அறை அமைக்க 2021 வரை அவகாசம் அளிக்க முடியாது. 100 அடி கொண்ட பாதுகாப்பு அறை அமைக்க 2021 வரை அவகாசம் தேவையா? நீண்ட காலம் அவகாசம் எடுத்து கொண்டால், சிலை கடத்தப்படுவது தொடரும். பாதுகாப்பு அறை அமைப்பதில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. இது தொடர்ந்தால், தலைமை செயலரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும் எனக்கூறி வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் காவல்துறையுடன் ஆலோசித்து பாதுகாப்பு அறைகளை விரைவாக கட்டி முடிப்பது பற்றி அறிக்கை வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்

Leave a Reply