shadow

நால்வர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில், இந்த நால்வரும் குற்றவாளிகள் என்பதை போலீஸ் தரப்பு சமீபத்தில் உறுதி செய்தது

இந்த நிலையில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் போலீஸாரால் சற்றுமுன்னர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று அதிகாலை ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையில் 4 பேரையும் போலீஸார் அழைத்துச் சென்றதாகவும், அவர்களிடம் பெண் மருத்துவரை கொலை எப்படி? என நடித்து காட்ட போலீஸார் கூறியதாகவும், அவ்வாறு நடித்து காட்டும்போது, திடீரென அவர்கள் நான்கு பேரும் தப்பி ஓடியதாகவும் தெரிகிறது.

அப்போது அவர்களை போலீசார் தடுக்க முயன்றதாகவும், ஆனால் தடுக்க முயன்ற போலீஸார்களை தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடியதாகவும், இதனையடுத்து போலீஸார் தற்காப்பிற்காக 4 பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *