இலங்கையில் தெலுங்கு பேசும் பழங்குடி இனத்தவர்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் காலங்காலமாக தமிழர்கள் தான் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது தெலுங்கு பேசும் பழங்குடி இனத்தவர்களும் வாழ்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு மொழி பேசும் மக்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளில் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் இலங்கையில் வாழ்ந்து வருவதாக இதுவரை தகவல்கள் இல்லை. இந்த நிலையில் இலங்கையில் தற்போது தெலுங்கு பேசும் பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அகிகுந்தாசா என்ற பழங்குடியின மக்கள் ஆவர்.

இவர்கள் பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்கின்றனர். அந்த இனம் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. அவர்களில் நூற்றுக் கணக்கானவர்கள் மட்டுமே வாழ்கின்றனர்.

இவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. பாம்பு பிடிப்பதையும், அவற்றை வேடிக்கை காட்டியும் பிழைப்பு நடத்துகின்றனர். இவர்கள் தீண்டதகாதவர்களாக நடத்தப்படுகின்றனர்.

இத்தகவலை ஆந்திர பிரதேச கலாசார கமி‌ஷனின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார். இலங்கையை இறுதியாக ஆண்ட மன்னர் இவர்களை அங்கு அழைத்து சென்று இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

ஆந்திராவில் இருந்து விரைவில் ஒரு அதிகாரிகள் குழு இலங்கை செல்ல இருக்கிறது. அவர்கள் இப்பழங்குடியினரை சந்தித்து அவர்கள் பற்றிய மேலும் பல தகவல்களை சேகரிக்க உள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *