shadow

vijay banவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று இன்னும் எத்தனை பேர் கிளம்பி வரப்போகின்றார் என்றே தெரியவில்லை. ஏற்கனவே இந்த கதை தன்னுடையது என்று கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மீஞ்சூர் கோபியின் பிரச்சனை இப்போதுதான் ஒருவழியாக முடிந்துள்ள நிலையில் தெலுங்கு திரைப்பட துணை இயக்குனர் ஒருவர் கத்தி படத்தின் கதை என்னுடையது என உரிமை கொண்டாடியுள்ளார்.

விஜய் நடித்த நண்பன் படத்தில் ஷங்கரின் இணை இயக்குனராக பணியாற்றிய நரசிம்மராவ் என்பவர், நண்பன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதை விஜய்யை மிகவும் கவர்ந்ததால் அவர் அந்த கதையை ஏ.ஆர்.முருகதாஸிடம் கூறி அதன்பின்னர் எடுக்கப்பட்ட படம்தான் கத்தி என நரசிமாராவ் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கத்தில் புகார் கூறியுள்ளார்.

மேலும் நரசிம்மராவ் இந்த கதையை கடந்த 2010ஆம் ஆண்டே இயக்குனர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. நரசிமாராவின் புகாரை அடுத்து கத்தி படத்தையும் நரசிம்மராவ் பதிவு செய்திருந்து வைத்த கதையையும் ஒப்பிட்டு பார்த்த சங்க நிர்வாகிகள் விஜய் நடித்த கத்தி படத்தில் நரசிம்மரா அமைத்துள்ள காட்சிகள் பெரும்பான்மையாக இருப்பதை முடிவு செய்தனர். இதனால் தெலுங்கு திரையுலகம் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

இதன்படி நரசிம்மராவுக்கு நியாயம் கிடைக்கும் வரை ‘கத்தி படத்தை தெலுங்கில் டப் செய்யவோ அல்லது ரீமேக் செய்யவோ கூடாது என்றும், எந்த ஒரு தெலுங்கு படங்களின் ரீமேக் உரிமையையும்  விஜய்க்கு கொடுக்கக்கூடாது என்றும் தடை விதித்துள்ளனர். விஜய் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விஜய் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த திடீர் தடை காரணமாக கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply