shadow

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் – இந்திய விமானப் படையில் சேர்ப்பு

tejasமுழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தேஜஸ் விமானங்கள் இன்று இந்திய விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய விமானப்படையிடம் இந்திய விஞ்ஞானிகள் இந்த விமானங்களை ஒப்படைத்தனர்

2003-ம் ஆண்டு முதல் எதிர்பார்க்கப்பட்டு முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த இலகுரக போர் விமானங்களான சூப்பர்சோனிக் ஒற்றை இயந்திர விமானம், தேஜாஸ், ஆகிய 2 விமானங்களையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (HAL), ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சி (ADA) இணைந்து வடிவமைத்துள்ளது. விமானப்படையினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது இந்திய முறைப்படி பூஜை செய்தும், தேங்காய் உடைத்தும் விழா நடத்தப்பட்டது.

இந்த விமானம் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்டு முயற்சியில் உருவான ஜெஎப் – 17 ரக போர் விமானத்தைவிட அதிகசக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டில் இதுபோன்ற 6 போர் விமானங்களையும், அடுத்த நிதியாண்டில் 8 விமானங்களையும் தயாரித்து வழங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தேஜஸ் போர் விமானங்களை, அடுத்த ஆண்டுக்குள் படையில் சேர்க்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

Leave a Reply