shadow

soniaசோனியா காந்திக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் சீக்கியர்கள் தாக்கல் செய்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் காங்கிரஸார் நிம்மதி அடைந்துள்ளனர்.

1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி இரண்டு சீக்கிய பாதுகாவலர்களினால் கொல்லப்பட்டபோது, அப்பாவி சீக்கியர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை தூண்டியதில் சோனியா காந்தியின் பங்கு பெருமளவு உள்ளது என அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டபோது, அவர் ஆஜராக மறுத்துவிட்டார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், 1984ஆம் ஆண்டு சம்பவம் நடந்துமுடிந்து 10 ஆண்டுகள் கழித்தே சோனியா காந்தி அரசியலுக்கு வந்தததால், சோனியாவுக்கும் இந்த கலவரத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

இதுகுறித்து சோனியாகாந்தியின் வழக்கறிஞர் கூறியதாவது, “மலிவான விளம்பரம் தேடும் நோக்கத்துடன் சோனியா காந்திக்கு எதிராக இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், இறுதியில் நீதி வென்றதாகவும் கூறினார்.

Leave a Reply