shadow

hyundaiவிண்வெளியில் பணிபுரியும் தனது தந்தைக்கு பூமியில் இருந்து 13 வயது சிறுமி ஒருவர் தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் தகவல் அனுப்பியுள்ளார் என்று கூறினால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.
hundai 1
அமெரிக்காவை சேர்ந்த 13 வயது சிறுமி ஸ்டெபனி தனது தந்தையின் மிகவும் பிரியம். ஆனால் அவர் விண்வெளியில் பணிபுரிவதால் அவரை நேரில் பார்த்து பல மாதங்கள் ஆயிற்று. இருப்பினும் தனது தந்தைக்கு தனது அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. சிறுமியின் ஆசையை நிறைவேற்ற பிரபல கார் நிறுவனம் ஹூண்டாய் முன்வந்தது.

hundai 2

ஹூண்டாய் நிறுவனம் அந்த சிறுமியிடம் அவர் தந்தையிடம் சொல்ல நினைத்ததை எழுதித்தர கேட்டுக்கொண்டது. அதன்படி சிறுமி
ஸ்டீவ் ஐ லவ் யூ’ என்று எழுதி கொடுத்ததை அப்படியே எடுத்துக் கொண்டு பல வாரங்கள் லாஜிஸ்டிக் நிபுணர்களுடன் பணிபுரிந்து சிவில் என்ஜினீயர்களுடன் இணைந்து அதை லே-அவுட்டாக வடிவமைத்து, ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தில் அதை அப்படியே காரில் பொருத்தியது.

ஸ்டெபனி பேப்பரில் எழுதிய வார்த்தைகளை நிவேடா என்ற உள்ள டிலாமர் என்ற பாலைவனத்தில் கார்கள் மூலம் எழுத முடிவு செய்தது.
 11 கார்கள் பிரம்மாண்டமாக அணிவகுத்து நின்றன. அந்த கார்களுக்கு ஆணிகள் பதிக்கப்பட்ட டயர்கள் பொருத்தப்பட்டன. இதனால், காரின் டயர்கள் எழுத்தாணியாக மாறின.

hundai 3
அவள், கடிதத்தில் எழுதியது இதுதான் “Steph loves you!”. புழுதி பறக்கும் அந்த வறண்ட நிலத்தில் துல்லியமாக காரை ஓட்டிய டிரைவர்கள் ஸ்டெபனியின் கையெழுத்தை தத்ரூபமாக எழுதினர். இதை ஹெலிகாப்ட்ரில் சென்ற ஸ்டெபனி பார்த்து ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றாள். சிறிது நேரத்தில் ஸ்டெபனியின் அப்பாவிடமிருந்து வீடியோ அழைப்பு வந்தது.

விண்வெளியில் இருந்து தன் பாச மகள் மண்ணில் எழுதிய கடிதத்தை புகைப்படம் எடுத்த அவர், அங்கிருந்து அதைக் காட்டியபடி மகளுக்கு ஐ லவ் யூ சொன்னார்.

காரால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட புகைப்படம் என்ற வகையில் இது கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளது

Leave a Reply