shadow

இலங்கை அதிபரின் இணையத்தை முடக்கிய மர்ம நபர் யார்? பெரும் பரபரப்பு

srilanka chief justiceஉலகெங்கும் ஹேக்கர்களின் கைவரிசையால் இணையத்தில் பாதுகாப்பு தன்மை குறைந்து வருகிறது. குறிப்பாக விவிஐபிகளுக்கு சொந்தமான இணையதளங்களில் ஹேக்கர்கள் புகுந்துவிடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் அதிகாரபூர்வ இணையதளத்தை ஒரு மர்ம நபர் ஹேக்கிங் செய்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பள்ளி தேர்வுகளை அதிபர் சிறிசேனா ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘இலங்கை இளைஞர்’ என்ற பெயரில் மர்ம நபர் அதிபரின் இணையதளத்தை ஹேக் செய்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை செய்த சைபர் க்ரைம் போலீஸார் நேற்று 17 வயது மாணவர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் தான் ஹேக்கிங் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

Leave a Reply