shadow

indian armyஇந்தியாவின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயுத தொழிற்சாலைகளில் காலியாக உள்ள 1572 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: மெக்கானிக்கல் – 876

பணி: இன்பர்மேஷன் டெக்னாலஜி – 23

பணி: எலக்ட்ரிக்கல் – 133

பணி: கெமிக்கல் – 296

பணி: சிவில் – 39

பணி: மெட்டலர்ஜி – 46

பணி: கிளாத் டெக்னாலஜி – 32

பணி: லெதர் டெக்னாலஜி – 04

பணி: தொழில்நுட்ப பணி அல்லாதவை (ஸ்டோர்ஸ்) – 41

சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 09.08.2014 தேதியின்படி மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.

கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் துறையின் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

கெமிக்கல், மெட்டலர்ஜி, கிளாத்திங் டெக்னாலஜி, லெதர் டெக்னாலஜி துறையின் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் மூன்று வருட டிப்ளமோ அல்லது வேதியியல் துறையில் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இன்பர்மேஷன் டெக்னாலஜி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி அறிவியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்பம் அல்லாத பணி (ஸ்டோர்ஸ்). மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணி (ஸ்டோர்ஸ் தவிர) விண்ணப்பிப்பவர்கள் இன்ஜினியரிங், டெக்னிக்கல், மனிதஇயல், அறிவியல், வணிகவியல், சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 09.08.2014 தேதியின்படி அனைத்து பணிகளுக்கும் 27க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்தினாளிகளுக்கு இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி  அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ‘Principal Director, Recruitment fund ofrb, Ambajhari, Nagpur’ என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற விண்ணப்பதாரரிகளின் சந்தேகங்களுக்கு www.ofb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2014.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.08.2014.

Leave a Reply