shadow

8வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர். மன அழுத்தம் காரணமா?it staff

ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதும், ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடுவதும் மட்டுமே பலரது கண்ணிற்கு தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு இருக்கும் வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மையால் ஏற்படும் சிரமங்கள் ஆகியவை சொல்லி மாளாது. பலர் வேலைப்பளுவாலும் மன உளைச்சலாலும் மனநிலை சரியில்லாமலும், தற்கொலை வரை செய்து கொள்ளும் நிலைமையும் ஏற்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரு பெல்லந்தூர் பகுதியில் உள்ள ஜென்பேக்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த குல்ஷன் சோப்ரா என்பவர் வேலைப்பளு காரணமாக நேற்று 8-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு பணிக்கு சென்ற இவர், 11.30 மணியளவில் 8-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பெல்லந்தூர் போலீஸார், குல்ஷன் சோப்ரா வின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பெங்களூர் விக்டோரியா மருத்துவனைக்கு அனுப்பினர். பஞ்சாபில் உள்ள அவரது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் ‘அலுவலகத்தில் வேலை பளு அதிகரித்ததன் காரணமாக குல்ஷன் சோப்ரா கடந்த சில மாதங்களாக தனிமையாக இருந்துள்ளார். மன அழுத்தம் காரணமாக நண்பர்கள் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக தூக்கத்தை இழந்து, இரவில் பணியாற்றியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்’ என்று கூறப்படுகிறது.

Leave a Reply