மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்

இண்டர்நெட் நெட்வொர்க் சரியாக வீட்டில் வராததால் அருகில் இருந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்பெடுத்த ஆசிரியர் குறித்த ஆச்சரியமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தனது கிராமத்திலிருந்து மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் பாடங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய வீட்டில் சரியாக இன்டர்நெட் நெட்வொர்க் வேலை செய்யவில்லை

இதனை அடுத்து அவர் தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தின் மேல் ஏறி அங்கு உட்காருவதற்கு வசதியாக ஏற்பாடு செய்து கொண்டார். அதன் பின்னர் காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை அந்த மரத்திலேயே உட்கார்ந்து மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆன்லைன் வகுப்புகளை எடுத்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறும்போது வீட்டில் எந்த இடத்தில் இருந்தாலும் தனக்கு நெட்வொர்க் சரியாக கிடைக்கவில்லை என்பதால் மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு மாணவர்களுக்காக பாடம் எடுக்கிறேன் என்று கூறியுள்ளார் இந்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply