shadow

இங்கிலாந்து டாடா நிறுவனங்களுக்கு சீன நிறுவனங்களால் ஏற்பட்ட பாதிப்பு.
tata steel
இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனம் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தனது கிளையை வைத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் ஸ்கோன்தோர்ப், டல்ஜெல் மற்றும் கிளைட்பிர்ட்ஜ் ஆகிய பகுதிகளில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களில் 1,170 பேரை வேலையிலிருந்து அதிரடியாக நிறுத்த டாடா ஸ்டீல்  திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாகம் சமீபத்தில் ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டது. இந்த திட்டத்தின்படி இங்கிலாந்தில் உள்ள ஸ்கோன்தோர்ப் கிளையும் பணிபுரியும் 900 தொழிலாளர்களும், டல்ஜெல் மற்றும் கிளைட்பிரிட்ஜ் ஆலைகளில் பணிபுரியும் 270 தொழிலாளர்களும் தமது வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனா சமீபகாலமாக குறைந்த விலையில் உருக்கு உற்பத்தி செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு மானிய விலைக்கு விநியோம் செய்து வருகின்றது. இதனால், இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் உருக்கு ஐரோப்பாவில் அவ்வளவு விற்பனையாவதில்லை. இதன் காரணமாகவே டாடா ஸ்டீல் நிறுவனம் தமது ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த அதிரடி திட்டத்திற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply