என்ன ஒரு ஆச்சரியம்: திடீரென குறைந்த டாஸ்மாக் விற்பனை!

Tasmac

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக மது விற்பனை மிகவும் சரிந்து உள்ளது.

மதுக்கடைகள் சரியாக திறக்கவில்லை மற்றும் மதுக்கடைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது

மேலும் மழை காலம் என்பதால் பீர் வகைகள் விற்பனை சரிந்து உள்ளதாகவும் சராசரி விற்பனை விட 60 சதவீதம் குறைவாக பீர் விற்பனையாகியுள்ளதாக தெரிகிறது.

அதேபோல் மது விற்பனையும் 40 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.