தஞ்சை பைபாஸ் சாலையில் போதையால் ரகளையில் ஈடுபட்ட பட்டதாரி பெண். அதிர்ச்சி வீடியோ இணைப்பு

wineshoமதுவின் கொடுமையால் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் குழந்தைகளும் சீரழிந்து வருவதால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து வரும் நிலையில் தஞ்சையில் இளம் பெண் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை விளார் பைபாஸ் சாலையில் 25 வயது மதிக்கதக்க இளம் பெண் ஒருவர் நேற்று  காலை குடிபோதையில் தள்ளாடியவாறு சுற்றி வந்தார். அவர் அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார். தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சாலையில் சென்றவர்களை தாறுமாறான வார்த்தைகளால் உளறினார். இதனால் அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அன்புராணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போதையில் ஈடுபட்ட பெண்ணை மடக்கி பிடித்து வேனில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது அந்த பெண் உளறியபடி சரியாக தகவல்களை கூறவில்லை. அவர் மீது குடம், குடமாக தண்ணீர் ஊற்றப்பட்ட பின்னர் சற்று போதை தெளிந்தது. பின்னர் அவரிடம் விசாரித்த போது அவரது பெயர் உஷாதேவி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்க்கால் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அவர் பி.ஏ. (பொருளாதாரம்) படித்தவர் ஆவார். தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் கடந்த 2013–ம் வருடம் படிப்பை முடித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உஷாதேவி நடன கலைஞர் ஆவார். கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிகளில் கலந்து நடனமாடி வந்துள்ளார். நேற்று இரவு இவர் நடன நிகழ்ச்சிக்கு சென்ற போது யாரோ மது வாங்கி கொடுத்துள்ளனர். அதன் போதை தெளியாததால் இன்று காலையில் ரகளை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வரும்  நிலையில் இளம்பெண் போதையில் ஆட்டம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *