shadow

pen copyதைவான் நாட்டில் உள்ள ஒரு பெண் வயிறு வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவருடைய வயிற்றில் ஒரு பேனா இருந்தது.

தைவான் நாட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஷிங் ஃபேங் என்பவர் நேற்று வயிறு வலி காரணமாக டாய்பாய் என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த டாக்டர்கள் அவருடைய வயிற்றில் 4இன்ச் நீளத்தில் ஒரு பொருள் இருப்பதை பார்த்தனர். பின்னர் அவருடைய வாய் வழியாக எண்டோஸ்கோப் கேமிராவை நுழைத்து பார்த்தபோது அது ஒரு பேனா என்பதை உறுதி செய்தனர்.

உடனடியாக அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய வயிற்றில் இருந்த பேனாவை வெளியே எடுத்தனர். இன்னும் சில நாட்கள் அந்த பெண் இந்த வயிற்று வலியை கவனிக்காமல் இருந்திருந்தால் அவருக்கு மரணம் ஏற்பட்டிருக்கும் என டாக்டர்கள் அதிர்ச்சியுடன் கூறினர். அவருடைய வயிற்றில் எப்படி இந்த பேனா சென்றது என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் அவர் கடந்த வாரம் கல்லூரி படிப்பு முடிந்த தினத்தன்று மகிழ்ச்சியில் மது அருந்தியதாகவும் அந்த நேரத்தில் அவர் பேனாவை விழுங்கியிருக்கக்கூடும் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply