shadow

tasmacதமிழக டாஸ்மாக் கடைகளில் கடந்த புத்தாண்டு தின விற்பனை ரூ.164 கோடி என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விற்பனை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.22 அதிகம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 6800 டாஸ்மாக் கடைகளும், 21 எலைட் மதுமான கடைகளும் உள்ளன. ஒவ்வொரு பண்டிகையின்போதும் ஒரு இலக்கு வைத்து மது விற்பனையை அதிகரித்து வரும் டாஸ்மாக் இந்த புத்தாண்டில் ரூ.250 கோடிக்கு மதுவிற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு புத்தாண்டு விற்பனை ரூ.164 கோடி ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, ”கடந்த ஆண்டு புத்தாண்டு பண்டிகையின்போது 31 ஆம் தேதி (புத்தாண்டுக்கு முந்தைய தினம்) ரூ.82 கோடிக்கும், 1 ஆம் தேதி (புத்தாண்டு அன்று) ரூ.60 கோடிக்கும் என 2 நாட்களுக்கு ரூ.142 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மது விற்பனை கடந்த ஆண்டைவிட ரூ.22 கோடி அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு மது விற்பனையில், பிராந்தி மது வகைகள் அதிகளவு விற்பனையாகி உள்ளது. மொத்தம் 30 லட்சம் மதுபான வகை பெட்டிகளும் (பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா உள்பட மது வகைகள்), 1 லட்சத்து 45 ஆயிரம் பீர் பெட்டிகளும் விற்றுள்ளன. தமிழகத்தில் மது விற்பனையில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தையும், காஞ்சிபுரம் 2 ஆம் இடத்தையும், சென்னை 3வது இடத்தையும் பிடித்துள்ளது” என்றார்.

Leave a Reply