shadow

5பத்தாம்வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

அந்த தேர்வு முடிவுகள் இன்று காலை மிகச்சரியாக 10 மணிக்கு வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

இவற்றில் //www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரி smart phone மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்கள் அந்த செல்போனில் இருந்து SSLC என்று செல்போனில் பதிவு செய்து சற்று இடம் விட்டு ரிஜிஸ்டர் நம்பரை பதிந்து 53576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் முடிவை தெரிந்துகொள்ளலாம். இந்த தகவலை பி.எஸ்.என்.எல். துறை தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் விறுவிறுப்பாக தங்களது தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மற்றும் செல்போன் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிந்துகொண்டு வருகின்றனர்.

Leave a Reply