shadow

exam resultதமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் 9அம் தேதி வெளீயாக உள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளத்திலும் பார்க்கும்படியான வசதியை தமிழக அரசின் தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடந்த +2 தேர்வுகளின் முடிவுகளை தமிழக அரசின் தேர்வுத்துறையின் அதிகாரபூர்வ இணையதளமான //tnresults.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். நாளை மறுநாள் மே 9ஆம் தேதி காலை 10 மணிமுதல் இந்த இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தேர்வுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ஆம் தேதி வெளிவரும் என்றும், அன்றைய தினத்திலும் இதே இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply