பாஜகவுக்கு வெற்றி கிடைக்காததற்கு காரணம் இதுதான். தமிழிசை செளந்திரராஜன்

tamilisaiதஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது,. மூன்று தொகுதிகளிலும் திமுக இரண்டாவது இடத்தை பெற்றது. இந்நிலையில் தேமுதிக கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் பாஜக மூன்றாவது இடத்தை கைப்பற்றியதை அரசியல் நோக்கர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

இதுகுறித்து கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘மூன்று தொகுதிகளிலும் பணப்பட்டுவாடாவை தடுத்திருந்தால் பாஜக மூன்றாவது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு வந்திருக்கும். மேலும் பாஜக வேட்பாளர் இல்லாமலேயே வாக்கு எண்ணிக்கை நடந்துள்ளது. பாஜக வேட்பாளர், முகவர் இல்லாமல் வாக்கு எண்ணிக்கை நடந்தது தவறு. பாஜக, வேட்பாளர்களுக்கு போதிய வசதிகளை செய்து தந்திருக்க வேண்டும். இதை செய்ய தவறிய தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.,

மேலும் அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றையும் அளித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *