shadow

போட்டி சட்டமன்றத்தில் கூட முதல்வராக முடியாத ஸ்டாலின்! டுவிட்டரில் தமிழிசை கலாய்ப்பு

போட்டி சட்டமன்றத்தில் கூட முதல்வராக முடியாத ஸ்டாலின், நிஜத்தில் எப்படி முதல்வராக போகிறார் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பதிவு செய்த டுவீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாளை ஸ்டாலின் உள்பட திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி கொண்டிருந்தபோது தமிழிசை போட்ட டுவீட்டால் திமுக தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர் தனது டுவிட்டில் கூறியதாவது

போட்டிசட்டமன்றத்தில் கூட முதல்வராக முடியாத ஸ்டாலின் முதல்வரை பதவிஇறக்காமல் நுழையமாட்டேன் என்ற சவாலைக்கைவிட்டு மீண்டும் நாளை ஜனநாயக கடமை ?ஆற்றச்செல்வதாக சொல்வது ஏன்?போட்டி சட்டமன்ற நாடகம் ஒரே நாளில் போணியாகமல் போனதாதல் தானே?தொடர்ந்து வெளிநடப்பு தலைவர் வழிநடத்தும்தலைவராக பணியாற்றுக

திமுககடந்தகால சட்டமன்ற ஜனநாயக கடமையாற்றிய நினைவுகள்?ஜெ.அடிஉதைஆடைகிழிப்பு மைக்குகளும்மண்டைகளும்உடைப்பு சட்டைவேட்டிகளோடு சேலைகிழித்தவரலாறு போட்டிசபாநாயகராகமதியழகன்/ஆசனத்தில் அமர்ந்து அதையும் கிழித்த நீங்கள் தற்சமயம் உங்கள்சட்டையை நீங்களேகிழித்துக்கொள்வதுமே திமுகவின்பரிணாம வளர்ச்சி?

இவ்வாறு தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

Leave a Reply