shadow

மக்கள் பிரச்சனையில் போராடாத கமல், அரசியலுக்கு வர துடிப்பது ஏன்?

உலக நாயகன் கமல்ஹாசனின் நேற்றைய டுவிட் அவர் அரசியலுக்கு வருவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. சும்மா இருந்த கமல்ஹாசனை சீண்டிவிட்டுவிட்ட அரசியல்வாதிகள் தற்போது அவர் அரசியல் பாதையை நோக்கி திரும்பியுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் எளிதில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கமலின் அரசியல் வருகை குறித்து கூறியதாவது:

கமல் இதுவரை மக்களுக்கு என்ன செய்தார். அவர் என்ன சமுதாய பார்வையோடு இருந்தார்?. மக்களுக்கான பிரச்னையின் போது எவ்வளவு இறங்கி போராடினார்கள்?, மக்களுக்கு ஆதரவாக இருந்தாரா? என்பதை எல்லாம் பார்க்க வேண்டியது முக்கியம்.

கமல் அவர்களின் படத்தை கூட மக்கள் பணத்தை கொடுத்து, டிக்கெட் வாங்கி தான் பார்க்கின்றனர். அவர் கலைச் சேவை செய்கின்றேன் என இலவசமாக படத்தை வெளியிடவில்லை. அதனால் யார் அரசியல் தலைவர்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்தாலும் நான் அதை எதிர்க்க மாட்டேன். ஆனால் அரசியலில் பல தியாகத்தை செய்து, போராடிக்கொண்டிருக்கு பல தலைவர்கள் இருக்கின்றனர். நீங்கள் உங்கள் துறையில் பிரபலமாக இருந்துவிட்டு, இன்று உங்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வர நினைப்பது ஏன் என்பது என் கேள்வி

இவ்வாறு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.