shadow

Tamilisai-Soundarajan-250இதுவரை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக பாஜக புதிய தலைவராக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று அதிகாரபூர்வமாக இதை தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் “ஒருவருக்கு ஒரு பதவி” என்ற கொள்கை முடிவின்படி பொன்.ராதா கிருஷ்ணன் மத்திய அமைச்சராகிவிட்டதால், அவரிடம் இருந்த கட்சித்தலைவர் பதவி நீக்கப்பட்டுள்ளது என்றும், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அமித் ஷா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தவிர தமிழகத்தைச் சேர்ந்த எச். ராஜா பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராகவும், லலிதா குமாரமங்கலம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Leave a Reply