ஒரு கவுன்சிலர் கூட இல்லாமல் இருந்தோம், இப்போது ஆட்சியை பிடித்து விட்டோம்: தமிழிசை

திரிபுரா மாநிலத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாமல் இருந்த பாஜக தற்போது ஆட்சியை பிடித்துவிட்டதை போல தமிழகத்திலும் விரைவில் ஆட்சியை பிடிப்போம் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

பாஜகவினர் மீதான தாக்குதல் இனி நடைபெறக் கூடாது. கடந்த 7-ம் தேதி குண்டு வீசியபோதே, போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது தாக்குதல் நடந்திருக்காது,

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்காமல் விடமாட்டோம். நிச்சயம் இங்கு ராம ராஜ்ஜியம் மலரும். மேலும், ஒரு பாஜக கவுன்சிலர் கூட இல்லாத திரிபுராவில், கடும் உழைப்பால் வெற்றி பெற்றதைப் போல், தமிழகத்திலும் ஆட்சியை பிடிப்போம். இதனால் தான் மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார்

தமிழகத்தில் இனி பாஜகவினர் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு கை இருக்காது என்றும் தமிழிசை காட்டமாக கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *