கஜானா குறித்து கமல் கூறிய கருத்துக்கு தமிழிசை பதிலடி

நடிகர் கமல்ஹாசன் நேற்று ரசிகர்களை சந்தித்து பேசியபோது, ‘நாங்கள் கஜானாவை நோக்கிச் செல்லவில்லை என்றும் மக்களை நோக்கிச் செல்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

சினிமாத்துறையில் நடிப்பு மூலம் கஜானாவை நிரப்பிவிட்டு, கஜானா எனக்கு குறிக்கோள் அல்ல என கமல் கூறுவதை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

தமிழிசையின் இந்த பதிலுக்கு கமல் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் தனது கஜானாவை உழைப்பின் மூலம் நிரப்பியுள்ளார். அரசியல்வாதிகள் போல ஊழல் செய்து அல்ல’ என்று கூறி வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *