shadow

திருநாவுக்கரசு அவர் கட்சியை மட்டும் கவனிப்பது நல்லது. தமிழிசை யோசனை

ஒருபக்கம் ரஜினி அரசியலுக்கு வருவாரா? அல்லது வரமாட்டாரா? என்பது குறித்து விவாதம், இன்னொரு பக்கம் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசியலின் மையமாக ரஜினி மாறிவிட்டார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர்.

ரஜினியை பாஜக பக்கம் இழுக்க வேண்டும் என்று அமித்ஷா, நிதின்கட்காரி முதல் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் வரை கோரிக்கை விடுத்து கொண்டிருக்கின்றனர். அதே சமயம் பாஜகவில் அவர் சேர்ந்துவிடகூடாது என்ற வகையில் காங்கிரஸ் கட்சியினர் காய் நகர்த்தி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தலைவர் திருநாவுக்கரசர், ரஜினி தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் திருநாவுக்கரசருக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, ‘”மத்திய அரசு தனது மூன்று ஆண்டுகால சாதனையை வெளியிட்டது. அதேபோல, மாநிலத்திலும் அமைச்சர்கள் தங்களது ஓராண்டு சாதனையை வெளியிட வேண்டும். அப்போதுதான், மக்களுக்கு அரசு என்ன செய்திருக்கிறது? என்ன செய்ய வேண்டும்? என்பது தெரியும்.

ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உட்பட பல்வேறு தலைவர்களும், ரஜினி பி.ஜே.பி-யுடன் இணையக் கூடாது என்கின்றனர். திருநாவுக்கரசர், எங்களது கட்சியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர், காங்கிரஸ் கட்சியையும் கொஞ்சம் கவனிக்கட்டும். அந்தக் கட்சியை வளர்க்கட்டும்.

ரஜினி தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்று திருநாவுக்கரசர் ஜோசியம் சொல்கிறார். எங்களது கட்சியைப் பலப்படுத்த, ரஜினிக்கு அழைப்பு விடுத்தோம். எங்களது விருப்பத்தை நாங்கள் கூறினோம். ரஜினி வந்தால் எங்களது கட்சிக்குப் பலம். ஆனால், ரஜினி மட்டுமே பலம் இல்லை. நல்லது செய்வதற்கு கூட்டம் கூட்டுவதில் என்ன தவறு? என்று கூறியுள்ளார்.

Leave a Reply