shadow

தமிழிசை செளந்திரராஜன்: 2017ஆம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல்வாதி விருது

சமூக ஊடகங்களில் மிக அதிகமாக விமர்சனம் செய்யப்படுபவர், கலாய்க்கப்படுபவர் என்ற பட்டியலில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் அவர்களுக்கு 2017ஆம் ஆண்டில் இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்ட பெண் அரசியல் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இந்த விருதை தமிழிசை செளந்திரராஜனுக்கு சென்னையில் நேற்று நடந்த விழா ஒன்றில் வழங்கியது

தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏவை கூட பெற்று தர முடியாத, கடந்த 2016ஆம், ஆண்டில் தமிழிசை உள்பட அனைத்து பாஜக வேட்பாளர்களும் தோல்வி அடைந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் தேர்தலில் தனது கட்சி வேட்பாளருக்கு டெபாசிட் கூட வாங்கி தர முடியாத ஒரு தலைவர் எப்படி 2017ஆம் ஆண்டின் சிறந்த தலைவரானார் என்று டுவிட்டர் பயனாளிகள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Leave a Reply