வாஜ்பாய்-மோடியை ஒப்பிட்ட வைகோவிற்கு தமிழிசை கண்டனம்

முன்னாள் பாரத பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்கள் உடல்நலக்கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வாஜ்பாய் உடல்நிலை குறித்து நேரில் சென்று விசாரித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாஜ்பாய் போல மோடி நல்லாட்சி தரவில்லை என கூறியதாக செய்தி வெளிவந்துள்ளது.

இவ்வாறு வாஜ்பாய் மற்றும் மோடியை ஒப்பிட்டு பேசிய வைகோவிற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‘அரசியலில் இவருக்கு இணை இவர் என்று யாரையும் சொல்ல முடியாது. இதை வைகோ போன்றவர்கள் முடிவு செய்ய முடியாது. பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டை உலக அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உயர்த்திக்கொண்டு இருக்கிறார். வாஜ்பாயும், மோடியும் இந்தியாவை ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் ஆள முடியும் என்ற நிலையை மாற்றியவர்கள்’ என்று கூறினார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *