shadow

ஆன்மீக நம்பிக்கையில்லாத கமல், அமாவாசையில் அறிக்கை விட்டது ஏன்? தமிழிசை கேள்வி

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அன்றைய தினம் முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும் அறிவித்தார்.

கமல்ஹாசனின் இந்த அறிவிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, ‘கமல்ஹாசன், அப்துல்கலாம் பிறந்த ஊரில் அரசியல் கட்சி தொடங்குவது அவர் விருப்பம். பி.ஜே.பி-தான் அப்துல்கலாமை மதித்து ஐனாதிபதியாக்கியது. அப்துல் கலாமை அரசியலாக்க கமல் முயல்கிறார். திராவிட அரசியல் நடத்துவேன் என்று கூறி ஆன்மிக நம்பிக்கை இல்லாத கமல்ஹாசன், ஏன் நிறைந்த அமாவாசை இரவு அரசியல் அறிவிப்பை வெளியிட வேண்டும்? தி.மு.க தலைவர் கலைஞர் போன்று வெளியில் ஒன்றை பேசிவிட்டு, உள்ளே ஒரு நம்பிக்கையை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்’ என்று கூறினார்.

மேலும் ஆயுதம் ஏந்துவோம் என்று பாரதிராஜா பயமுறுத்தும் விதத்தில் பேசியதால், ஆன்மிகவாதிகள் பயந்துவிடுவார்கள் என்று அவர் கனவு காணக்கூடாது என்றும் ஆண்டாள் பற்றி பேசிய வைரமுத்து கேட்ட மன்னிப்பில் உள் உணர்வு இல்லை என்றும் கூறினார்.

Leave a Reply