shadow

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புரோ கபடி போட்டியில் நேற்று பெங்களூர் புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ் அணி, இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் இருந்தது.

இந்த நிலையில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் தங்கள் அபார ஆட்டத்தினால் 29-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணிக்கு நம்பிக்கை கிடைத்துள்ளது. இனிவரும் போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி இதேபோல் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply