shadow

isisஇராக் மற்றும் சிரியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்றதாக ஐதராபாத் நகரில் வாழும் தமிழர் ஒருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இது குறித்து ஐதராபாத் காவல்துறை ஆணையர் எம்.மகேந்தர் ரெட்டி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழகத்தை  சேர்ந்த 30 வயது முனவட் சல்மான் என்பவர், கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த சாப்ட்வேர் எஞ்சினியர். இவர் தற்போது ஹைதராபாதில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் ஃபேஸ்புக் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அந்த அமைப்பில் சேருவதற்காக, சவூதி அரேபியா நாட்டு விசாவைப் பெற அவர் முயற்சித்ததாகவும் காவல்துறைக்குத் தெரிய வந்தது. சவூதி அரேபியா சென்ற பின்னர் அங்கிருந்த அவர் இருந்து இராக் செல்ல திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையறிந்த ஐதராபாத் போலீஸார் அவரை  சுற்றிவளைத்துப் பிடித்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் அவரது பெற்றோரையும் அழைத்து, மகனை நல்வழிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். தீவிரவாதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று சல்மானுக்கு புத்திமதி கூறிஅவரை விடுவித்து விட்டனர். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

இதனிடையே, உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “”தீவிரவாத நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறு அந்த இளைஞரிடம் வலியுறுத்தியுள்ளோம். எனினும் அவர் அது போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டால், வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்வோம்” என்று தெரிவித்தார்

Leave a Reply