shadow

திரையுலகினர்களை ஆட்டிப்படைத்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் கைது

கோலிவுட் திரையுலகினர்களுக்கு இருக்கும் ஒரே பெரிய சவால் ஆன்லைன் பைரசி. குறிப்பாக தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை சேர்ந்தவர்கள் ஒரு புதிய படம் வெளியான மாலையே தங்கள் இணையதளத்தில் ஒளிபரப்பி கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தனர். இந்த நிலையில் திரையுலகினர் மற்றும் போலீசாரின் தீவிர முயற்சியால் இந்த இணையதளத்தின் ஐந்து அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கேரள கிரைம் பிரான்ச் ஆண்டி பைரசி செல் சூப்பர்டென்ட் B.K. பிரஷாந்த் காணி தலைமையிலான குழு இன்று திருநெல்வேலியில் கைது செய்தது.

பைரசி வேலைகளில் ஈடுபட்ட ஐந்து பேரும் 19 டோமையின்களிலிருந்து மாறி மாறி இந்த வேலையை செய்துவந்தனர். ஒரு விளம்பர ஏஜன்சியிடம் இவர்கள் தொடர்பில் இருப்பதை அறிந்து இவர்களை தொடர்ந்து கண்காணித்து போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் பெயர் கீழ்வருமாறு கார்த்தி வயது 24 ( விழுப்புரம் ) , சுரேஷ் வயது 24 , TN Rockers பிரபு வயது 24 , DVD Rockers ஜான்சன் வயது 30 ( திருநெல்வேலி ) , மரிய ஜான் வயது 22.

இவர்கள் Tamil Rockers.IN , Tamil Rockers.AC , Tamil Rockers.NE , Tamil Rockers.CO , Tamil Rockers.IS , Tamil Rockers.US , Tamil Rockers.RO போன்ற 19 Domainகளை பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply