தெர்மோகோல்..தெர்மோகோல்.. அமைச்சர் செல்லூர் ராஜூவை கலாய்த்த திமுக எம்.எல்.ஏக்கள்

பெரும் பரபரப்புக்கு இடையே தமிழக சட்டமன்றம் இன்று கூடியது. இன்றைய முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்துநின்று 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் முதலில் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, எம்எல்ஏ செங்குட்டுவன், கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் வங்கியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்றும், நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு வேளாண் வங்கிகளின் பாதுகாப்பை கருதி விரைவில் சுற்றுச்சுவர் எழுப்பப்படும். 4 லட்சத்து 65 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் பாதுகாப்பாகவே உள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 677 கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்துக்கு 66 ஆயிரம் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

அமைச்சர் பதிலளித்து கொண்டிருந்தபோது திமுக எம்.எல்.ஏக்கள் தெர்மாகோல், தெர்மாகோல் என கூச்சலிட்டதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *