டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயி தற்கொலை முயற்சி. அதிர்ச்சி தகவல்

டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த சில நாட்களாக இரண்டாவது முறையாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று ஒரு விவசாயி 10 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது முறையாக டெல்லி ஜந்தர் மாந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்குமேல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்த சுப்ரமணியம் (வயது 61) திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆர்எம்எல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அபாய கட்டத்தில் இருந்து தப்பினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *