அமெரிக்கா, கியூபா, அர்ஜெண்டினா, பனாமா, வெனிசுலா போன்ற நாடுகளுக்கு விமான சேவை செய்து வரும் தனியார் விமான நிறுவனமான டேம் (TAME) என்ற நிறுவனம் திடீரென வெனிசுலா நாட்டிற்கு செல்லும் விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது.

வெனிசுலா நாட்டிற்கு செய்த விமான சேவைகளுக்கு அந்நாடு இந்த நிறுவனத்திற்கு தரவேண்டிய நிதியை கொடுக்காததால் இந்த அதிரடி நடடிக்கையை எடுத்துள்ளது டேம். ஏற்கனவே வெனிசுலா நாட்டிற்கு செல்ல ரிசர்வ் செய்திருந்த பயணிகள் தங்கள் கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தனது விளக்கமான அறிக்கையை சமூக வலைத்தளங்களில் கூறியுள்ள டேம் நிறுவனம், நிதி பரிவர்த்தனைக்கு பின் மீண்டும் வெனிசுலா நாட்டிற்கு விமானம் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அறிவித்துள்ளது. வெனிசுலா டேம் நிறுவனத்திற்கு தரவேண்டிய நிதியை நிறுத்தி வைத்ததற்கான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.

Leave a Reply