shadow

Tamannaஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் படங்களை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் மூன்றாவது படம் நண்பேண்டா. இந்த படத்திலும் உதயநிதிக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கின்றார். இயக்குனர் ஜெகதீஷ் இயக்கும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ்.

இந்த படத்தில் ஹீரோயின் நயன் தாராவை தவிர ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க தமன்ன ஒப்பந்தம் ஆகியுள்ளார். சிறப்புத்தோற்றத்தில் வரும் தமன்னா, இந்த படத்தில் நடிகை தமன்னாவாகவே நடிக்கிறார். எனவே இந்த படத்தில் அவரை மேக்கப் இல்லாமல் நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்.

முதன்முதலாக தமன்னா நடிகையாகவும், அதுவும் மேக்கப் இல்லாமலும் நடிக்கிறார். ஒரே ஒருநாள் மட்டும் நடிக்கும் தமன்னாவிற்கு ரூ.10 லட்சம் சம்பளம் கொடுக்கின்றார் உதயநிதி.

இந்த படத்தில் வழக்கம்போல சந்தானம் உதயநிதியின் நண்பனாக நடிக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஒருவரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply