விஷாலின் ‘கத்திச்சண்டை’யின் நாயகி தமன்னா?

tamannaஅஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த தமன்னா சமீபத்தில் தர்மதுரை’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில் தற்போது அவர் விஷாலுக்கும் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள அடுத்த படம் ‘கத்திச்சண்டை’. இந்த படத்தில்தான் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் மிக விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறாது.

விஷால், தமன்னா, சூரி, வடிவேலு உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *