shadow

டொனால்ட் டிரம்ப்-தலாய்லாமா விரைவில் சந்திப்பு. உச்சகட்ட கோபத்தில் சீனா

1ஏற்கனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்து கொண்டிருக்கும் நிலையில் நாடுகடத்தப்பட்ட திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா விரைவில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தகவல் சீனாவின் கோபத்தை அதிகரித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் இப்போதைய பிரதமர் ஒபாமா தனது ஆட்சிக்காலத்தில் இதுவரை 8 முறை தலாய்லாமாவை சந்தித்து பேசியுள்ளார். இதனால் அமெரிக்கா மீது கடுங்கோபத்தில் உள்ள சீனா, தற்போது புதிய அதிபரும் தலாய்லாமாவை சந்திக்க உள்ளதால் பதவியேற்கவுள்ள டொனால்டுக்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் செங் சுவாங் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தலாய்லாமா உலகில் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து சீனாவிற்கும் அவர்களுக்கும் இடையிலான உறவை பலவீனப்படுத்துகிறார்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply