shadow

இந்த ஆறுவகை போன்களை நீங்கள் வைத்துள்ளீர்களா? உங்களுக்கு இனிமேல் வாட்ஸ் அப் வராது

whatsapp_2215218fஉலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் ஒருசில குறிப்பிட்ட மாடல் போன்களில் வரும் டிசம்பர் 31ஆம் தேதி முதல் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1) சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட என்8 ஸ்மார்ட்ஃபோன்கள்.

2) பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 மென்பொருளில் இயங்கும் ஸ்மார்ட்ஃபோன்கள்.

3) நோக்கியா எஸ் 40. எஸ் 60 ஸ்மார்ட்ஃபோன்கள்.

4) ஆன்ராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2 ஆகிய மென்பொருளில் இயங்கும் ஸ்மார்ட்ஃபோன்கள்.

5) வின்டோஸ் ஃபோன் 7.1 மென்பொருளைக் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள்.

6) ஆப்பிள் ஐஃபோன் 3 ஜிஎஸ், ஐஓஎஸ் 6.

மேற்கண்ட ஆறு மாடல் போன்களில் ஒருசில வர்த்தகக் காரணங்களுக்காக, வரும் டிசம்பர் மாதம் முதல் வாட்ஸ் அப் செயல்படாது என்றும், மேற்கண்ட போன்களை வைத்திருப்பவர்கள் தங்களுடைய வாட்ஸ் அப் சேவையை தொடர விரும்பினால் வேறு வகை போன்களை மாற்றி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply