கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் உள்பட பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த கொடூர தாக்குதல்களில் 160 பேர் பலியாகினர். அப்போது, தாஜ் ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் அங்கு தங்கியிருந்தவர்களில் பலர் பலியாகினர்.

இந்த சம்பவம் நடந்த போது இங்கிலாந்தைச் சேர்ந்த 33 வயது வில் பைக் என்பவர் தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தார். தீவிரவாத தாக்குதல் நடந்தப்போது அங்கிருந்து தப்பிக்க முயன்ற அவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்ததால் அவருக்கு முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் போய்விட்டது. இந்த தாக்குதல் சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், வில் பைக் தாஜ் ஹோட்டலின் உரிமையாளர்கள் மீது லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டும் போதிய பாதுகாப்பு அளிக்காத ஹோட்டல் மீது அவர் வழக்கு தொடர்கிறார்.

Leave a Reply