shadow

சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதியில் தைவான் அதிபர் பயணம். கிழக்காசிய நாடுகளிடையே பதட்டம்

taiwanசீனாவை ஒட்டி உள்ள தென் சீன கடல் பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளன. இவற்றில் ஜப்பான் வசம் உள்ள ஒருசில தீவுகளை சீனா உரிமை கொண்டாடி வருவதால் தென்சீனக்கடல் பகுதியில் அவ்வப்போது பதட்டம் ஏற்பட்டு வருகிறது.

இதே போல் மேலும் சில தீவுகளுக்கு தைவான், தென் கொரியா, பிரலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தங்களுக்கே சொந்தம் என கூறி வருகின்றன. இதனால் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மத்தியில் அவ்வப்போது பதட்டம் நிலவி வருகிறது. இதில் தைவான், ஜப்பான் நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதனால் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே இந்த விஷயத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தைவான் அதிபர் மா இங் ஜியோ சர்ச்சைக்குரிய தென்சீன கடலில் உள்ள தீவு பகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து தைவான் தனது கடற்படை கப்பல்களை அதிக அளவில் அந்த பகுதிக்கு அனுப்பி உள்ளது.

Leave a Reply