taapsiபெண்களின் முக்கிய பிரச்சனையான மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை மார்பக விழிப்புணர்வு அமைப்பு பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்ய நடிகை டாப்சியை அணுகினர். டாப்சி இதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். சமுகத்தில் உள்ள பெண்களுக்கு தன்னால் ஒரு நன்மை கிடைக்கிறது என்றால் கண்டிப்பாக செய்வதாக ஒப்புக்கொண்ட டாப்சி, இதற்காக சம்பளம் எதுவும் தேவையில்லை என்று கூறிவிட்டார்.

இதுகுறித்து நடிகை டாப்சி தனது டுவிட்டரில், “சென்னை மார்பக புற்றுநோய் விழிப்புணவு அமைப்பின் பிராண்ட் அம்பாசிடராக இன்று முதல் செயல்பட இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நாகார்ஜுனா மனைவி நடிகை அமலாபால் ஏற்கனவே மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு அம்பாசிடராக இருந்துள்ளதால் அவரிடம் சில ஆலோசனைகளையும் நேரில் கேட்டு தெரிந்து கொண்ட டாப்சி, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்களுக்கும் நேரடி விசிட் செய்ய முடிவு செய்துள்ளாராம்.

டாப்சி மார்பக புற்றுநோய் முகாமிற்கு அடிக்கடி செல்லவிருப்பதால், தான் நடித்துக்கொண்டிருக்கும் வை ராஜா வை படத்திற்காக கொடுத்த கால்ஷீட் தேதிகளை மாற்ற முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்து இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷிடம் பேசியுள்ளார். ஐஸ்வர்யா முதலில் டாப்சியின் கருத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், சமூக சேவை என்ற நல்ல எண்ணத்திற்காக அவர் கால்ஷீட் தேதிகளை மாற்றியிருப்பதால் சமாதானம் ஆகி ஒப்புக்கொண்டுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *