சிவகார்த்திகேயன் படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களுக்கு அனிருத் மற்றும் டி.இமான் ஆகிய இருவரும் மாறி மாறி இசையமைத்து வந்த நிலையில் தற்போது முதல்முதலாக அவருடைய படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளார்.

24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ஐந்தாவது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்க நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ரவிகுமார் என்றும் இசைஅயமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரவிகுமார் இதற்கு முன்னர் ‘இன்று நேற்று நாளை படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது படத்திற்கு முதன்முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளது குறித்து தனது டுவிட்டரில் கூறிய சிவகார்த்திகேயன் கூறியபோது, ‘தனது வாழ்நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரியும் அந்த நேரத்திற்காக காத்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *