shadow

india T20

 

20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளதால், இதுவரை நடந்த போட்டிகளின் புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ரன் ரேட் அடிப்படையிலும் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

நேற்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேற்கு இந்திய தீவுகள் அணியின் 129 ரன்கள் இலக்கை இந்தியா 19.4 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தற்போது 4 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இனி வரும் போட்டிகளில் இருந்து ஒரு வெற்றி பெற்றாலே இந்திய அணி அரையிறுதிக்கு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தைல் ஆஸ்திரேலிய அணியை பாகிஸ்தான் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply